திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம். கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையின் முகப்பகுதி, கண்ணாடி போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு சேதம். 790 வழக்குகள் கொண்டு தமிழகம் 3வது இடத்தில் உள்ளது எல்லா போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. இதை தடுப்பதற்காக 1984-ம் ஆண்டு பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு உடைய சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் ஆயிரத்து 790 […]
கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற […]