மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உணவு மற்றும் குடிநீர் கிடைப்பது கூட மிகவும் சிரமமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்! இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள […]
செங்கல்பட்டில் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை. செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தாய், சேய் குழந்தைகள் சிறப்பு வார்டில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார்டில் திடீரென்று மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது ஒரு தாயும் குழந்தையும் படுத்திருந்த படுக்கையின் மீது விழுந்துள்ளது. ஆனால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. உடனடியாக குழந்தையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, அடுத்த வார்டுக்கு பாதுகாப்பாக சென்று விட்டனர். […]
டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் கோட்டைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக […]
மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. நேற்றிரவு, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும் இந்த காற்று மற்றும் மழையில் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, தாஜ்மகாலில் இடி தாக்கிய நிலையில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும், தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட […]
ரஷ்யாவில் ஒருவர் தன் மெர்சிடிஸ் எஸ்.யூ.வி AMG G63 மாடல் காரை ஹெலிகாப்டர் வைத்து தூக்கிக் கீழே போட்டு நொறுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உள்ளூர் செய்திகளில், இகோர் மொராஸ் தனது நண்பர் ஒருவருடன் போட்ட ஒப்பந்தத்திற்காகவே காரை நொறுக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் இகோர் மொராஸ் என்பவர் ஆசையாக வாங்கிய மெர்சிடிஸ் எஸ்.யூ.வி AMG G63 மாடல் காரை அவர் ஓட்டும் போது தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் […]
வடசென்னை அனல்மின் நிலையத்தில், கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 வது அலகில் 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் 600 மெகா வாட் மின்சாரமும் என 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கொதிகலனில் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 70 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் […]
பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும். பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். […]