டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 225 ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக, வரும் ஜூன் 16-ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், கல்லணையில் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், அங்குள்ள பயிர்கள் பயன்பெற கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் […]
நாளை முதல் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டதில் உள்ள பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் 241.62 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுவதால், கோபி, பவானி, அந்தியூரில் உள்ள 24,505 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்காக நீர் […]