உ.பி-யில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை காலை நக்க வைத்த உயர் ஜாதி இளைஞன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி தலித் மக்களுக்கு மத்தியில் பல்வேறு கொடுமைகள் நேரிட்டு வருகிறது. அந்த வகையில் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனை, உயர் ஜாதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது கால்களை நக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]
தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர். ஒரு வங்காள பேராசிரியர், தன்னுடன் பேசுவதற்கு மறுத்துள்ளதாகவும் தூய்மையற்றவர் என்று அழைத்ததாகவும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாணவரின் பெயர் சோம்நாத் சோ. இந்த மாணவரின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த பேராசிரியர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது. சோம்நாத், சாந்திநிகேதன் சியம்பதி பகுதியில் உள்ள டீக்கடையில் பேராசிரியர் சுமித் பாசுவை சந்தித்துள்ளார். […]
தலித்துகள் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மாறினால் தேர்தலில் தலித்துகளுக்கான சலுகைகளை பெறமுடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். கிறிஸ்தவத்திற்கும் அல்லது இஸ்லாமியத்திற்கும் தலித்து ஒருவர் மாறினால் அவர் மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், இடஒதுக்கீட்டின் வேறு எந்த சலுகைகளும் அவர்களால் பெற முடியாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இருப்பினும், இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட […]
தலித் சமுதாய ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதையாக நடத்தியது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பாலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், […]
தலித் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அடித்த குற்றச்சாட்டில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை இடைநீக்கம். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சீதானகரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தலித் இளைஞர் பிரசாத் என்பவரை காவல்துறையினர் சரமாரியாக தாங்கி உள்ளனர். இதனால், படுகாயமடைந்த பிரசாத், ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரின் டிரக்கை நிறுத்தியதற்காக பிரசாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, […]
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் 17 வயது தலீத் இளைஞன் தூங்கிக்கொண்டிருந்த பொழுது 4 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இது குறித்து விகாஸின் தந்தை கூறுகையில், எனது மகன் கடந்த ஜூன் 1 ம் தேதி அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டொம்கேரா கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றான். இதனை கண்ட அங்குள்ள உயர்சாதி இளைஞர்கள் விகாஸ் குமார் கோவிலுக்கு உள்ளே நுழைவதை தடுத்துள்ளனர் .இதனை பொறுப்படுத்தாமல் விகாஸ் குமார் கோவிலுக்குள் சென்று […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் […]