2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சனும், தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் கே.பாலசந்தருக்கு பிறகு இவ்விருதினை […]
இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்த தினம் இன்று. தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஏப்ரல் 30, 1870 -ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா […]