நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதில் ஒரு தொகுதியான வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் வயநாடு தொகுதியில் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பணியாற்றிய எஸ்.சுதாகர் ரெட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆதலால் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.