சென்னை : கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறை கைதும் செய்துள்ளது. படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடந்ததை ஏற்க […]
DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய […]
DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் […]
இந்த கொரோனா காலத்தில் பல தரப்பினரும் பல வகையில் ஆலோசனை குடுத்து வரும் நிலையில், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, மீன்வள துறை அமைச்சர் மக்களுக்கு கொரோனா டிப்ஸ் வழங்கியுள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார். மேலும், நம் […]
திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 39 தொகுதிகளில் வாங்கிய வாக்குகளையும் அதிமுக வாங்கிய வாக்குகளையும் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருக்கிறது. ஸ்டாலின் ஒரு மாயையை உருவாக்குகிறார் .திமுகவிற்கு வளர்ச்சி என்பது இல்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். அதிமுக வாக்கு வங்கியை அதிகரித்து இருக்கிறது .எங்களுடைய […]
உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் திமுக தேய்கின்றன தேய்பிறை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் மறைவு மறக்க முடியாத தருணம் ,அதிமுகவிற்க்கு பேர் இழப்பு என்று தெரிவித்தார் .அதிமுக வளர்கின்றன,வளர்பிறை .திமுக தேய்கின்றன தேய்பிறை .உள்ளாட்சி தேர்தல் திமுக மகத்தான வெற்றி பெற்றவில்லை நாடாளுமன்ற தேர்தல் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது […]
முதலமைச்சராக விரும்புபவர்கள் நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராக அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டம் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. இதுகுறித்து அதிமுக கூறியுள்ளது. எனவே எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய விஷயங்களை அதிமுக ஆதரித்து வருகிறது. அதனடிப்படையில் இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை .எனவே எதையும் ஆராயாமல் அதிமுக முடிவு எடுக்காது என்றார். ஒரு […]
திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.ஆனால் நடத்தவிடாமல் திமுகதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை தேர்தலில் எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக உட்கட்சிப் பூசலால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக […]
குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று தெரிவித்தார்.மேலும் ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று கூறினார். இவரது இந்த கருத்திற்கு அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் கூறுகையில், துணை முதல்வர் ஓபிஎஸ் […]
சட்டப்படியே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே. சட்டத்திற்கு புறம்பானது அல்ல மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல. எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர், எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர்.அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் இப்போது நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.ஒரு சில விழா […]
திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற கதையாக தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும். தமிழக அரசு தென்பெண்ணை ஆறு விவகாரத்தில்அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில் திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான். ஐஐடி மாணவி தற்கொலை பிடித்து அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .நிச்சயமாக குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் […]
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக பணக்கார கட்சி, ஏழைகளின் கட்சி அல்ல. அதனால் தான் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சி. உதயநிதி கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களின் சேவையை, மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக நிலைத்து நிற்கும்.அம்மா அவர்கள் கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய இயக்கம் எதுவும் இல்லை. ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது என்று அமைச்சர் […]
ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அவர்களை வரவேற்பது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்று கூறினார். மேலும் ராதாபுரம் தொகுதியை பொறுத்தவரை எந்த தவறும் நடைபெறவில்லை. அந்த வகையில் தான் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கண்டிப்பாக தர்மம், […]
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அவர் பேசுகையில்,அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும். கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது.குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது […]
தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு வேட்பாளர்களுக்கு திமுக கொடுத்த தொகை எவ்வளவு என்ற உண்மையை, மத்திய அரசு வெளிக்கொண்டு வரவேண்டும்.பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி. மேலும் தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். ஐ.நா.விலும் தமிழை மேற்கோள்காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் […]
காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எப்படியாவது அதிமுக ஆட்சி மீது சாயம் பூச வேண்டும் என்கிற நடவடிக்கையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது. திமுக ஆட்சியில் தான் நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு […]
விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,அ.தி.மு.க. ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது, வேட்பாளர் தேர்வில் தாமதம் இல்லை. உரிய நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார். படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது.சினிமா மூலம் எம் ஜிஆர் போல நல்ல கருத்துகளை பரப்பினால் மக்கள் ஆதரவளிப்பார்கள் சினிமா […]