#Breaking:அதிர்ச்சி…வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரிப்பு!

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.   … Read more

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? – கமல்

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சமீப நாட்களாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை தொட்டு வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திலேயே சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்து, தற்போது ரூ.810 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், … Read more

“விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?” – கமல்ஹாசன்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது என்பது கிறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து … Read more