டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இனிப்பு கடைக்கு அருகே ஒரு ஸ்கூட்டரில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், வெடிப்பு சத்தம் பெரியதாக […]
பாகிஸ்தான் : ஹைதராபாத்தில் உள்ள ப்ரீதாபாத் பகுதியில் உள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு நிரப்பும் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக ARY நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. நீருன்கோட்டின் UC-8-ல் உள்ள மீர் நபி பக்ஸ் டவுன் சாலையில் உள்ள சச்சா பச்சா மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் கடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது, அருகில் உள்ள பல வீடுகளில் […]
மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இந்த சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 14 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி, காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை […]
லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. லக்னோவின் சின்ஹாட்டில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர், 2 பேர் உயிரிழந்துவிட்டனர். அதே நேரத்தில் பல தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் கோம்டிநகரில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சிலிண்டர் வெடிப்பின் போது அங்கு சுற்றியுள்ள பகுதியும் அதிர்ந்தது. விபத்து நடந்த […]
கொடைக்கானல் வெள்ளப்பாறை அருகில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு முற்றிலும் சேதமடைந்தது. கொடைக்கானல், பழனி செல்லும் சாலையில் உள்ள மேல் வெள்ளப்பாறை என்னும் இடத்தில் 20 வருடமாக வசித்து வருபவர் சுரேஷ். நேற்று இரவு வீட்டில் புதியதாக வாங்கி வைத்திருந்த சிலிண்டரில் சமையல் செய்யும் போது இருந்து லேசான கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து,லேசான தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சுரேஷ், அவரது மனைவி பாரதியையும், தாயாரையும் அழைத்து கொண்டு வெளியில் வந்ததுள்ளார். அவர் வெளியில் வந்த […]