காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள், தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வார நாட்களில் ஓய்வு தேவைப்படவில்லை […]