சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு கடைசியில் வந்த ஒகி புயலால் மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளகினர்.இதனால் குமரி மக்கள் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை .எனவே கன்னியாகுமரி மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும்,மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் தக்கலை அருகே புலியூர்க்குறிச்சி பகுதியில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .நிவாரணம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். source: www.dinasuvadu.com
ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்ப முடியாமலும், கடலில் காணமல் போனவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமலும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலில் சிக்கியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களில் 6 மீனவர்கள் காணவில்லை. இதில் மீனவர் ஜூடுவின் உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்ததாக […]
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]
ஓகி புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:www.dinasuvadu.com
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்
கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர். பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான […]
கடலுக்குள் 29 படகுகளில் 106 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து 18 படகுகளில் இருந்த 76 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மீதமுள்ள 11 படகுகளில் இருக்கும் 30 மீனவர்களை துரிதமாக மீட்க மாண்புமிகு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தினார்கள். கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்களான ‘வைபவ்’ மற்றும் ‘ஆதேஷ்’ ஆகியன இப்பணியில் ஈடுபட்டுள்ளன என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஓகி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் மாவட்டங்களில் போதிய அளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பற்றியும் விளக்கினார். இந்நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழையால் நாகர்கோயிலில் நம்பியார் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக தற்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,மேலும் அங்கு ஒகி புயல் காற்று காரணமாக சுமார் 60 தென்னை மரங்கள் கிழே விழுந்துவிட்டது எனவும் தகவல் தெரிவிக்கின்றன இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி சாகர் புயல் வரும் எனவும் இந்த சாகர் புயலால் வரும் 3-ம் தேதி முதல் சென்னை,கடலூர்,நாகைபட்டினம் உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் பெருமழை பெய்யும் என வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கி புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒக்கி புயலாக மாற்றியுள்ளது .65 முதல் 75 கி.மீ, வேகத்தில் வீசி வரும் காற்று 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 38 மைல் வேகத்தில் ஒக்கி புயல் நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம் ஒக்கி புயல் மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத் தீவுகளை நோக்கி நகர்கிறது அடுத்த […]
நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து சிலோன் அக்க்ஹி புயலாக மாறியிருக்கிறது.இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரியில் வீசும் பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரம் விழுந்து மின்சாரம் மற்றும் சாலை துண்டிக்கபட்டுள்ளது. தூத்துக்குடியில் நெல்லையில் கன்னியாகுமரியில்