மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. ‘ஹமூன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் நேற்று (24 ஆம் தேதி) தீவிர புயலாக மாறி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதனையடுத்து மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. […]
வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஹமூன் புயல் நேற்று காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை […]