கன்னியாகுமரி மாவட்டம் தான் ஒகி புயலால் அதிகம் பாதிக்கபட்ட மாவட்டம் ஆகும்.எனவே இன்னும் அதன் பாதிப்பில் இருந்து மீளாத காரணத்தால் குமரியில் போராட்டம் நடத்திவருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. புலியூர்க்குறிச்சி […]
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தக்கலை அருகே புலியூர்க்குறிச்சியில் 10வது நாளாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தூத்துக்குடி : ஒக்கிபுயலில் சிக்கி பலியான மீனவர் கெனிஸ்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரணம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.இதேபோல் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஜூடு மற்றும் கேனிஷ்டன் ஆகியோரது உடல்கள் மட்டுமே DNA டெஸ்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மீனவர்களின் உடல்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்ப முடியாமலும், கடலில் காணமல் போனவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமலும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலில் சிக்கியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களில் 6 மீனவர்கள் காணவில்லை. இதில் மீனவர் ஜூடுவின் உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்ததாக […]
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]
கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர் பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்றும் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார் … source: dinasuvadu.com
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் குறைவாகவே மழையளவு பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்தால் மழை பெய்யவில்லை எனவே இந்தாண்டு மழை அளவு குறைந்துள்ளது. இந்தாண்டு 89% முதல் 110% மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 4 க்கு அப்புறம் தமிழகத்தின் மழை பெய்யவில்லை அதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட 9% குறைவாகவே மழை பெய்து உள்ளது. source : dinasuvadu.com
ஓகி புயல் வந்து தமிழ்நாடு, கேரளா கடலோர மாவட்டங்களை பெரிதும் பாதித்தது. மேலும், இதன் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் பலர் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி சில தினகளுக்கு முன்னர் வந்து ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரியில் ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதன் மொத்த பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழு 28ஆம் தேதி தமிழகம் வருகின்றனர். source : dinasuvadu.com
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பெரும்பாலான மீனவர்வர்கள் கடலுக்குள் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கன்னியாகுமரியில் வள்ளவிளை மற்றும் சின்னதுறை கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என தகவல்கள் வெளியாகி அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அதில் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 33 மீனவர்களும், மேலும், அவர்களில் வெளியூர் மீனவர்கள் 37 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், சின்னத்துறையில் மட்டும் 39 […]
ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் நடைபெற்ற டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டது தூத்தூரை சேர்ந்த மீனவர் இருதயதாஸ், சின்னதுறையை சேர்ந்த மீனவர் கிளிட்டல் என தெரியவந்தது.. source: dinasuvadu.com
ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் மத்திய குழு வரும் டிசம்பர் 26-ம் தேதி தமிழகம் வருகிறது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே போன்று அந்த மத்திய குழுவானது ஓகி புயல் பாதித்த கேரளா, லட்சத்தீவுகளிலும் மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை தமிழகத்துக்கு 3ம் கேரளாவிற்கு 4 ம் புயலால் பாதிக்கப்படாத குஜராத்திற்கு 7 குழுவும் அனுப்பப் […]
ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் […]
ஒக்கி புயலால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஆண்டனி ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு… source: dinasuvadu.com
கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு […]
ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: dinasuvadu.com
ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.நிவாரண பணிக்கு ₹747 கோடி, சீரமைப்பு பணிக்கு ₹5,255 கோடி வழங்க கோரிக்கை வைத்தோம்.அரசு அளித்த கோரிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு […]
ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு. ரூ. 4 ஆயிரத்து 47 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் – கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியிடம் […]
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர். வல்வினையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒகிபுயல் தாக்கத்தால் சுமார் 102 மைல்கள் கடந்து நடுக்களில் தத்தளித்தவர்களை மீன்பிடிக்க சென்றவர்கள் தங்களது உயிரை பணயம் காப்பாற்றினர். தங்களை காப்பாற்றியவர்களை கட்டித்தழுவி தங்களது நன்றியை பரிமாறி கொண்டனர். மேலும் படிக்க dinasuvadu.com