Tag: Cyclone Michaung

கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்… சூறை காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை.!

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருந்து நகர்ந்து சென்ற மிக்ஜாம் தற்போது தெற்கு ஆந்திர பிரதேசம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்! தமிழக அரசை போல தற்போது ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

aசென்னை கனமழை 4 Min Read
Michaung Cyclone - andhra pradesh

புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்…உதவிக்கரம் நீட்டிய சூர்யா – கார்த்தி.!

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நடிகர்களும் உடன் பிறந்த சகோதரர்களான  சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிச்சாங் புயலால் சென்னை மோசமான நிலையில் உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பெரும்பாலான சாலை போக்குவரத்து […]

Chennai Corporation 5 Min Read
suriya karthi

மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வால்டக்ஸ் சாலை, கொளத்தூர் நிவாரண முகாம்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், உணவுகளை வழங்கினார். இதன்பின், சென்னையில் வெள்ளம் சீரமைப்பு பணிக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் […]

Chennai floods 6 Min Read
mk stalin

ஓய்ந்தது மழை… வடியும் தண்ணீர் – மின்சாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில்  சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது […]

#Electricity 7 Min Read
thangam thenarasu

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை…  வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!  மிக்ஜாம் புயல் தற்போது சென்னை விட்டு விலகி 170 கிமீ தொலைவில் இருந்தாலும், மழையின் தாக்கம் முழுதாக குறையவில்லை. இன்று காலை 10 மணி வரையில் மிதமான […]

Cyclone Michaung 4 Min Read
Michaung Cyclone - Chennai rains

மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை…  வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.! 

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இன்றும் சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ… சென்னையை நெருங்கி இருந்த […]

Chennai floods 4 Min Read
Michaung Cyclone - Chennai floods

‘மிக்ஜாம்’ புயல் -17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!

‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் ‘மிக்ஜாம்’புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் புயல் நகர்ந்து நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையிலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் […]

Chennai Rains 3 Min Read
Tngovt

சென்னை மழை பாதிப்பு- இதுவரை 4 பேர் உயிரிழப்பு..!

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  தற்போது புயலாக வலுவடைந்தது.  இந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ  தொலைவில் வடகிழக்கில் ‘மிக்ஜாம்’ புயல் மையம் கொண்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல்  மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை […]

Chennai Rains 3 Min Read
death

சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்!

மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தீவிர புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் […]

chennai airport 4 Min Read
Chennai Airport

சென்னையில் இருந்து 100 கிமீ விலகி சென்றது மிக்ஜாம் புயல்!

சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் விலகி சென்றது தீவிர புயலான மிக்ஜாம் புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக […]

Chennai Rains 5 Min Read
cyclone

மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை… மாற்று உதவி எண்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய […]

Chennai Rains 4 Min Read
HELP LINE NUMBERS

மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். அப்போது, புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து […]

Amit shah 6 Min Read
amit sha

நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து,  சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக […]

#Exams 4 Min Read
anna university

நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், பொது விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை […]

Chennai Rains 6 Min Read
public holiday

தீவிரமடையும் மிக்ஜாம் புயல்…  தமிழகத்திற்கு விரைந்த 250 தேசிய மீட்புப்படை வீரர்கள்.! 

சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கடுமையாக தாக்கி வருகிறது.  சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜாம் புயலானது நிலைகொண்டுள்ளது. மணிக்கு 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அதி கனமழை அளவு கொட்டி தீர்த்து வருகிறது. இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கனமழை […]

Chennai Flood 4 Min Read
Michaung Cyclone - Chennai Flood

மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர […]

Chennai Rains 5 Min Read
red alert

Michuang Cylone Live : அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கனமழை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதக்கிறது. அதே சமயம் மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]

Chennai Flood 2 Min Read

மக்களே அலர்ட்: தீவிர புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்.! சென்னையில் இருந்து 90 கிமீ..

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு கொண்டு வருகிறது. புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் […]

Chennai Rains 5 Min Read
Cyclone Michaung

மிரட்டும் மிக்ஜாம் புயல்… தமிழகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்… வெளியான முக்கிய தகவல்..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் […]

#Chennai 6 Min Read
fire fighters

மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

கடந்த 27 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு சுமார் 8 கிமீ வேகத்தில் […]

#Chennai 5 Min Read
chennai flights