சென்னை : வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து தற்போது தான் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.குறிப்பிட்ட பகுதிகளில் புயல் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. மீட்ப பணிகளும் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வரவுள்ளார். அவர்கள் இங்கு புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கைகளை […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும் அரசு பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் ஆளும் அரசு மக்களை கைவிட்டு வருகிறது. முறையான திட்டங்களை தீட்டவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் செய்து இருந்தார். அவர் பதிவிடுகையில், ” புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிதியாக கேட்டிருந்த […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாத காரணத்தால் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நேற்றைய தினமே அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, தென்பெண்ணை […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் மக்கள் பகுதிகளிக்குள் புகுந்துள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, […]