பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தை கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசும் ,மாநில அரசும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று தெரிவித்தார்.மேலும் பிரதமர் தரப்பில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை இன்று பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனால் இன்று பிரதமர் நரேந்திரமோடி […]
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பூரி பகுதியில் ஃபானி புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், ஒடிஷா முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று […]
ஃபானி புயல் தொடர்பாக ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,புயல் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் அறிந்து வருகிறேன் .நாம் அனைவரும் ஒன்றாக கூடியுள்ள, அதே நேரத்தில் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் கடுமையான சூறாவளியை எதிர்கொள்கின்றனர். ஃபானி புயல் தொடர்பாக ஒடிசா, […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபானி அதி தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதேபோல் 22 கி.மீ வேகத்தில் நகரும் ஃபானி புயல் மே 3ஆம் தேதி பிற்பகலில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபானி புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும்.. ஃபானி புயல் காரணமாக, ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.