Tag: CWC22

இங்கிலாந்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி […]

AUSvsENG 5 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர்.  மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரின் ஹாக்லி ஓவல்  மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக […]

AUSvsENG 2 Min Read
Default Image

உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர்..!

தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68,  ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் […]

#INDvSA 3 Min Read
Default Image

தென்ஆப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி..!

உலககோப்பை மகளிர் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68,  ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் குவித்தனர். இதனால், தென் […]

#INDvSA 2 Min Read
Default Image

இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது…!

ஹாமில்டனில் நடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.  இன்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த மிதாலி-ராஜ் ஹாமில்டனில் பங்களாதேஷுக்கு எதிராக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது. பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி […]

CWC22 3 Min Read
Default Image

#Womens World Cup: இந்தியாவிற்கு அடிமேல் அடி .., ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி..!

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி மற்றொரு தோல்வியை சந்தித்துள்ளது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது. முதலில் இறங்கிய இந்தியா:  டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நான்காவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா (10) பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பேட்டிங்கை வலுப்படுத்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு பதிலாக களமிறங்கிய […]

CWC22 7 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சொதப்பிய இந்தியா:  அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு […]

CWC22 4 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை 2022: சீட்டு கட்டுபோல சரிந்த இந்திய மகளிர் படை..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு  135 ரன்களை இந்திய அணி […]

CWC22 4 Min Read
Default Image

‘வரலாற்று சாதனை’:மகளிர் உலகக் கோப்பையில் பாக்.வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தொடரில் வங்கதேசம் அணியானது பாகிஸ்தானை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி,ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.இதனால்,முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக,ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார்.மேலும்,அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 46 ரன்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நஷ்ரா சந்து […]

CWC22 5 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை: 155 ரன்கள் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வீழ்த்திய மிதாலி ராஜ் படை..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் அணியும் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் : அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  […]

CWC22 7 Min Read
Default Image

5 ரன்னில் அவுட்டானாலும்.. உலக கோப்பை போட்டியில் மிதாலி உலகசாதனை..!

அதிக போட்டிகளுக்கு கேப்டன்:  ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே பெண் கேப்டன். இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். பெலிண்டா கிளார்க் 23 போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  39 வயதான மிதாலிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக இன்றைய போட்டி 24-வது போட்டியாகும். […]

CWC22 5 Min Read
Default Image

ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் சதம் விளாசல்: விண்டிஸ் அணிக்கு 318 ரன் இலக்கு..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில்  இந்திய அணியின் மகளிர் படையும் , வெஸ்ட்இண்டீஸ் அணி மகளிர் படையும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த யாஸ்திகா பாட்டியா 7 வது […]

CWC22 5 Min Read
Default Image

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை கொஞ்சிய இந்திய மகளிர்படை.., குவியும் பாராட்டுகள்..!

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய செய்தது. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 67 ரன்கள் எடுத்தார். சினே ராணா ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்தனர். இந்த நான்கு பேரைத் தவிர எந்த ஒரு வீரரும் […]

CWC22 5 Min Read
Default Image

#Breaking:பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இறுதியில்,50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 244 ரன்கள் […]

CWC22 5 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை:ஸ்மிருதி,பூஜா வஸ்த்ரகர் அதிரடி-பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கு!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா,ஷஃபாலி வர்மா ஆகியோர் […]

CWC22 5 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை தொடர் – இந்திய அணி அறிவிப்பு

கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ. மார்ச் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள மகளிர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மிதாலி ராஜ் தலைமையிலான அணியே நியூசிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 6-ஆம் தேதி […]

BCCI 3 Min Read
Default Image