இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், […]
ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்தது . இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது. இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக தரப்பில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் உடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு காரணமாக அதிமுகவினர் […]