டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய வரிச்சலுகைகள் […]