மூன்றாவது அலையில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முக […]
புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கான தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி […]
தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் அறிவித்து, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று காணொலிக்காட்சி மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்தில் வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது எனவும் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் […]
மேற்கு வங்கத்தில் மே 4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
மாநில அரசு அறிவிக்கும் வரை தற்போதைய உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தத நிலையில், தற்போது ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட […]