தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே உள்ள மற்றும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? என்று கீழே காண்போம். தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாள் 7-1-2022-ன்படி இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை […]
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல். தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், மருத்துவர் துணைச்செயலாளர், டிஜிபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை […]
கருப்பு தினமான நாளை வன்முறை நடக்கும் அச்சம் உள்ளதால் இன்று மற்றும் நாளை ஸ்ரீநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட தினமான ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளதால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அச்சம் உள்ள காரணத்தால் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்ரீநகரில் இன்று (ஆகஸ்ட் 4) மற்றும் நாளை (ஆகஸ்ட் 5) ஆகிய இரு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் […]
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல். தமிழகத்தில் பொது முடக்கம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படலாமா? நீட்டித்தால் என்ன தளர்வுகள் அளிக்கலாம்? என முதல்வர் […]
நாடு முழுவதும் நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார். அதன்படி இன்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் மே 3 வரை தடை தொடரும் என்று […]