இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க. […]