கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் கடலூர் மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் […]