கடலூர்: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் தரைப் பகுதியில் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதுவரை 18 செ.மீ., மழை பதவாகியுள்ளது. கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது […]