கடலூர் : ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.3 செ.மீ. மழை பெய்த காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைப்போல, புயல் மழையின் கோரத் தாண்டவத்தால் விழுப்புரம் மற்றும் […]