திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை முன்னிலையில்: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கோரியதாகவும்,இதனை திமுக தலைமை கண்டு கொள்ளாத நிலையில் பாஜகவுக்கு செல்ல முயற்சி எடுத்துள்ளார். […]