சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த நிகழ்வில், 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதற்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் மூலம் தேவையான உதவி செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில், நன்றி தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்க போவதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. […]
கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும், 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ விளம்பரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பேரழிவு நிவாரணம் ஆகியவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.