Bitcoin : உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (டிஜிட்டல் நாணயம்) பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் முதல் முறையாக 70,000 டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிட்காயினின் மதிப்பு 66,800 டாலராக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.! புதிய அமெரிக்க ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கிரிப்டோ தயாரிப்புகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு சந்தையில் 50,000 டாலராக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பிட்காயின் என்ற மெய் நிகர் கரன்சி வெகுவாக கவர்ந்து வருகிறது. இது முற்றிலும் ஒரு மின்னணு முறையிலான பரிவர்த்தனையாகும். இதனால், இந்த காயினின் மார்க்கெட் மதிப்பும் வர வர உயர்ந்துகொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு […]
மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸ், ஜூன் காலாண்டில் வருவாய் மற்றும் லாபம் இரண்டிலும் பெரும் இழப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு முந்தைய காலாண்டில் இருந்து வருவாய் $2.033 பில்லியனில் இருந்து $803 மில்லியனாகக் குறைந்ததால் $1.1 பில்லியன் நிகர இழப்பை பதிவு செய்து, Q2 இல் 60% வருவாய் குறைந்ததாக அறிக்கைகள் வெளியிட்டன. காலாண்டு அடிப்படையில், காயின்பேஸ் இன் நிகர வருவாய் Q1 உடன் ஒப்பிடும்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. Q2 ஒரு கடினமான காலாண்டாக […]
பெரும்பான்மையான ஆல்ட்காயின்கள் இழப்புகளைப் பதிவு செய்வதால் பிட்காயின் $23,000க்கு கீழே சரிந்தது. உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான Bitcoin (BTC) கடந்த 24 மணிநேரத்தில் சிறிய சரிவைக் கண்டது. Ethereum (ETH), Dogecoin (DOGE), Solana (SOL) மற்றும் பல கிரிப்டோகரன்சிகள் 24 மணிநேரத்தில் இழப்புகளை எதிர்கொண்டன. மறுபுறம், அதிகம் அறியப்படாத ஆல்ட்காயின்களில், Chiliz (CHZ) டோக்கன் கடந்த 24 மணிநேரத்தில் அதிக லாபத்தை ஈட்டியது. நேற்று அதிக லாபம் ஈட்டிய Filecoin […]
ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க […]
கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் […]
கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக விக்கிமீடியா அறக்கட்டளை அறிவிப்பு. உலகின் மிக பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றான விக்கிப்பீடியா. சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. இணைய சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியா தளத்தை நிச்சயம் பயன்படுத்துவார்கள். விக்கிப்பீடியாவில் தனி மனிதன், நிறுவனங்கள், அரசு என அனைத்து விவரங்களும் இலவசமாக கிடைக்கும். வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இதில் கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் லாப நோக்கமற்ற விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது. லாபம் நோக்கமற்ற இந்த […]
உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் […]
பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள்.இது கிரிப்டோ உலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய திருட்டுகளில் ஒன்று. பிரபல ஆன்லைன் விளையாட்டான ஆக்ஸி இன்பினிட்டியின் கேமர்கள் பயன்படுத்தும் ரோனின் அமைப்பின் பிளாக்செயின் நெட்வொர்க்கில் இருந்து 600 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். 1,73,600 ஈதர்: கடந்த செவ்வாயன்று வெளியான தகவலின் படி,Ronin Network-இன் பிளாக்செயினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 1,73,600 ஈதர் மற்றும் 25.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டேபிள்காயின்,அமெரிக்க […]
கிரிப்டோகரன்சிகள் மைனிங் தொழில்நுட்பங்களில் ஏற்படும் உள்கட்டமைப்பு செலவுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கப்படாது நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில் கிரிப்ட்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு வருமான வரி 30 சதவீதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கிரிப்டோகரன்சிகள் அல்லது மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் […]
சென்னை:கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்,கிரிப்டோகரன்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு,ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளன எனவும்,உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார். மேலும்,அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் ரூ.100 கோடி […]
கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி பற்றி கேள்வி எழுப்பியபோது புதிய மசோதாவை உருவாக்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான விவாதம் நடத்தப்படும். கிரிப்டோகரன்சிகள் தவறானவர்களின் […]
அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி […]
இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயமானது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் முன்னோடியாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் ஒரு மூத்த மத்திய வங்கி அதிகாரி தெரிவித்தார். குறைந்தது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு தொடக்கம் தொடங்கப்படலாம் என்று கூறினார். எனவே நாங்கள் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்று ரிசர்வ் வங்கியின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுத் துறையின் தலைமை பொது மேலாளர் (சிஜிஎம்) பி. […]
கனடா:டொராண்டோவிற்கு அருகிலுள்ள ஹாமில்டன் நகரத்தில் உள்ள அமெரிக்கர் ஒருவரிடமிருந்து C$46 மில்லியன் ($36.5 மில்லியன்) மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைத் திருடியதாகக் கனடிய வாலிபர் கைது ஒருவர் செய்யப்பட்டுள்ளார். சிம் ஸ்வாப்பிங் எனப்படும் செல்போன் மோசடி மூலம் இந்த திருட்டு நடந்துள்ளதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடியானது பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணை ஹேக் செய்து இரண்டு அடுக்கு செக்யூரிட்டி பாஸ்வ்வ்ர்டை இடைமறித்து இந்த நூதன திருட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த விசாரணையானது பெடரல் பீரோ […]
எத்திரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவரும்,இளம் தொழிலதிபருமான விடாலிக் புட்டரின் என்பவர் இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8,800 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.இதன்காரணமாக, நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான கொரோனா தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் உபகரணங்கள் போன்ற உதவிகள் […]
பல நாடுகளில் கிரிப்டோகரன்சி தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையிலும், இதுவரை இல்லாத அளவுக்கு பிட்காயின் 20,000 டாலராக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்று தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் முதலீடு செய்த நிலையில், தற்போது பங்குச்சந்தை மற்றும் நாணய சந்தை மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர். வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் நேற்று ஓரே நாளில் 4.5% உயர்ந்து, 20,440 டாலராக ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5,000 டாலர்களைக் குறைத்துக் கொண்டிருந்த இந்த […]