ஆந்திர பிரதேசம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சந்தையில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து அதன் காலில் கயிறால் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாடிபாகா பகுதியில் உள்ள சந்தையில், இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் விடாமல் கரைந்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர் கரைந்த […]