ஆந்திர பிரதேசம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சந்தையில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து அதன் காலில் கயிறால் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாடிபாகா பகுதியில் உள்ள சந்தையில், இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் விடாமல் கரைந்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர் கரைந்த […]
ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம். இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக பறந்த டெலிவரி ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் […]
காக்கைகளிடம் சிக்கிய ஆந்தையை காப்பாற்றி பத்தாம் வகுப்பு சிறுவன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள மங்கலக்குறிச்சியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஹரபிரியன். இவர் வெளியில் சத்தம் கேட்டு சென்ற போது அங்கு காக்கைகள் கூட்டம் கூட்டமாக இணைந்து ஆந்தை ஒன்றினை துரத்துவதை கண்டுள்ளார். உடனடியாக அந்த மாணவன் துரத்தி கொண்டிருந்த காக்கைகளை விரட்டியுள்ளார். அதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஆந்தைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றியுள்ளார். அதனையடுத்து அந்த ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவனின் […]
பறவையினங்களிலேயே மக்களோடு மக்களாய் இசைந்து வாழ்கின்ற பறவைகளில் ஒன்று தான் காகம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் காக்கை ஒன்று தாவியபடி சுற்றிதிரிந்தது. இதனையடுத்து, அங்கு காவலர் சந்திரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த காக்கையை பார்த்த காவலர் சந்திரன், அந்த காக்கைக்கு உணவு மற்றும் தண்ணீர் அளித்து பராமரித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். மனிதநேயத்துடன் காக்கைக்கு உதவிய காவலரை, மக்கள் […]
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மண்டலத்தில் இருக்கும் சுமேலா என்ற கிராமத்தில் வசிப்பவர் சிவா கேவத். இவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே அவரை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துகின்றனர். அவர் எப்போது வெளியே வருவார் என அவர் வீட்டு வாசலில் காக்கைகள் மற்றும் அந்த கிராம வாசிகளும் கூட காத்திருக்கின்றனர். ஏனென்றால், சிவாவை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துவது, அந்த கிராம வாசிகளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட சிவாவை வெளியே வர […]