ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.இதனால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை. சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் […]