கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில்,குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகம் முழுவதும் உள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும். அதற்காக ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,கடந்த காலங்களில் […]
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபாட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இந்த முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கான ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று 2 ம் கட்ட அறிவிப்புகளை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். […]