எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் […]
நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி […]
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க […]
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ரூ.3 உயர்த்தி இருப்பதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுவதாக விமர்சித்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு […]
வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து காங்கிரஸ் கட்சியை பாஜக கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யபட்டது.கடந்த தேர்தலில் டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். இவரின் […]