பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவருக்கு மூளையில் கட்டி இருந்ததை அடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. […]