தமிழக அரசால் சுற்றுலா தலமென்று அறிவிக்கபட்ட வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அடுத்த மாரம்பாடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புனித அந்தோனியர் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தில், உலக அமைதி வேண்டி அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டன. பின்னர் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். இந்த சிறப்புப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்து பிறப்பையொட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை பரங்கிமலையில் உள்ள புனித தாமஸ் பேராயலத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் மாற்று மதத்தினரும் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி […]
கிறிஸ்துமஸ் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி மகிழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதுவே […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25-ம் தேதி மாநிலங்களவைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 மற்றும் மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதிகளுக்கு […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபடுவார்கள். இதனை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 13 பொம்மைகள் உள்ள ஒரு செட்டின் விலை ரூபாய் 750 முதல், […]