பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸும் தங்கள் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது: “எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்.எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.எனினும்,எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து […]
ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு […]
திறமை ஒருபோதும் போதாது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நூற்றாண்டின் வீரர் என்ற விருதை பெற்றபின் ரொனால்டோ பேச்சு. நேற்று துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருதுகளில் ஜுவென்டஸ் மற்றும் போர்ச்சுகல் சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு “பிளேயர் ஆஃப் தி செஞ்சுரி” விருது வழங்கப்பட்டது. 2001 முதல் 2020 வரை உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றபின் பேசிய ரொனால்டோ, தனக்கு 40 வயதாகும் வரை முதலிடத்தில் […]