தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், அதுபோன்ற நபர்களை தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகளை வலுத்து வந்த நிலையில், பலமுறை நீதிமன்றத்தில் […]