வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த ஓடிடி தளத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்காக அமேசான் நிறுவனம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வரும் […]