ஐபிஎல் 2024 : இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது தான் கனவு என மயங்க் யாதவ் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இருக்கும் மயங்க் யாதவ் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். […]