கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க ஐஏஎஸ் நிலையில் சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.