ரஷ்யாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகை ஆற்றில் இறக்கி வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இர்குட்ஸ்க் (Irkutsk) என்ற இடத்தில் உள்ள படகு கட்டுமானத் தளத்தில் புதிய படகு கட்டப்பட்டு வெள்ளோட்டத்திற்காக கிரேன் மூலம் ஆற்றுக்குள் இறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக படகின் பாரம் தாளாமல் கிரேன் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிரேன் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிகழ்வில் கிரேனும், படகும் பலத்த சேதமடைந்தன.