கொரோனா வைரஸ் சிவகாசியில் கிராமங்களை தாக்கி வருவதால் பட்டசுகள் உருவாக்கப்படும் ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் தற்பொழுது வரை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சிவகாசியில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது. சிவகாசியில் கிராமங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி வருகின்ற ஜூலை 9 முதல் ஜூலை 19 வரை 11 நாட்களுக்கு அனைத்து ஆலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.