கொரோனா வைரஸ் தாக்குதலால் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு பல அதிகாரிகளும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், 53 வயதான சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து, நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
குப்வாரா பயங்கரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 சி.ஆர்.பி.எப் படையினர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதி குப்ராவிலுள்ள கிரால்குண்ட் வங்கம் – காசியாபாத் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டாலும், சிஆர்பிஎஃப் படையினரிலும் மூவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திர […]