தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் குடுக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் பொது இதனை அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் அதனை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட்கள் மார்சிஸ்ட் […]
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நன்றியை தெரிவித்துள்ளார். முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்ததாலே வெற்றி சாத்தியமாகியுள்ளது.இதே போல், நாடு முழுவதும் மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயம் வென்றிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , சட்டசபையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தது புள்ளி விவர கணக்கை படிப்பது போன்று இருந்தது.மக்களுக்கான எதிர்கால திட்டம் இல்லை . தமிழக்த்திற்கு 4 லட்சம் கோடி கடன் நிதி […]
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து திமுகவின் தனிப்பட்ட கருத்து என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார். இது குறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களின் உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற வகையில் மத்திய அரசு கணினி பயன்பாடுகளை கண்காணிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது.மக்களின் உரிமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது மத்திய அரசின் இந்த நடவடிக்கை என்று […]
திருவள்ளூர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதை அடக்கி ஒடுக்கும் அதிமுக அரசின் காவல்துறை கண்டபடி பேசினாலும் எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை பறிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:- இன்றைக்கு ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சித்துறையில் நடைபெற்ற ஊழலை செய்தியாக சேகரித்த நிருபருக்கு கொலை […]
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு […]