சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ… இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் பெட்ரோலியம் நிறுவனமான சிபிசிஎல் (CPCL) நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவு, வெள்ளத்தில பக்கிங் கால்வாய் வழியாக, கொசஸ்தலை […]
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு சமயத்தில் புறநகர் எண்ணூர் பகுதியில் இயங்கி வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தேக்கி வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் கழிவுகள் வெள்ளநீரோடு கலந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடற்பரப்பில் பரவி அப்பகுதி மக்களை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. இதனால், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து, உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. […]