எரிபொருள் விலை குறைப்பை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் குறித்து பேச எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. […]