“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்குள் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது. மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]