தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் […]
தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த […]
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடுப்பூசி முகாம் நடத்தும் பொழுது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து தடுப்பூசி முகாமுக்கு பயன்படுத்தலாம் என்றும் […]
அடுத்த மாதம் தமிழகத்திற்கு 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மேலும், மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதால் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தற்பொழுது பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் […]
நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் […]
கொரோனா மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இல்லாத முதியோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி, கருப்பு பூஞ்சை, மூன்றாம் அலை ஆகியவை குறித்த முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலத்தால் உயர் […]
இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் சொந்த தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் […]
தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது மக்கள் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்துவதை புரிந்து கொண்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை தங்கள் நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது பல இடங்களில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய […]
இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொகள்ளாத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாமாக முன்வந்து தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே சீராக […]
இந்தியாவில் இளைய தலைமுறையினருக்கு தடுப்பூசி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 16-ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி போடக்கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த தடுப்பூசி போடுவதில் முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன் பின்பு 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் பரவியதால் மே 1ஆம் தேதி […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமென மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் சிலர் ஆர்வம் காட்டினாலும், பலர் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என […]
இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே உலகின் பல நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி […]
இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடந்து தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது தான் தீர்வு என அறிவுறுத்தப்பட்டு […]
பிரான்சில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக அதிகமாக தான் இருந்தது. ஆனால், தற்போது பிரான்சில் முன்பை விட குறைவாக குறைந்துள்ளது. அங்குள்ள மக்களில் 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்கள் தற்பொழுது பழைய நிலைக்கு […]
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்தியாவில் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு […]
கொரோனாவிற்கான 2 டேஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாக கடைபிடிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்க உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா […]
ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல லட்சக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வயதானவர்களுக்கு போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், வருகிற மே 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தத் […]
போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்புச் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டாலும் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் போர்கால அடிப்படையில் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க […]
கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்காக ஊரடங்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தற்பொழுது தடுப்பூசியும் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக 60 வயதுக்கு […]