மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கன்னட நடிகரும், அர்ஜூன் அவர்களின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. இதுவரை அதிலிருந்து மீளாத அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் […]
கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்தாத மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகளின் சோதனைகளை கைவிடுவதாக WHO அறிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல டாக்டர்களும், ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உதவும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்காது என்றும், எனவே தற்காலிகமாக இதனை நிறுத்தி வைப்பதாகவும் உலக சுகாதார […]
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,42,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் கொரோனாவால் 3194 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் 81 021 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் […]
கடந்த மாத தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்தது.இதில் 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கப்பலில் வந்த அனைவரும் ஆஸ்திரேலியாவின் சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 வைரஸ் […]
தனது ஊழியர் ஒருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் COVID-19யின் தொற்று அதிகம் இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரிக்கிறது. இங்கு சுமார் 34,000 பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை […]
சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர். ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 […]