சென்னை: இந்தியாவில் FLiRT என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா என்ற தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியது. இதனையடுத்து கொரோனாவை எதிர் கொண்டு, வாழ்கை முறைகளை மாற்றி அதற்கு ஏற்றார் போல் மக்கள் வாழ பழகிவிட்டனர். இருந்தாலும் கூட, கொரோனாவின் புதிய மாறுபாடு அவ்வப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், அதனால் எந்தவித பெரிய பாதிப்புகளும் இல்லையென கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அண்மையில் பரவிய கொரோனாவின் மற்றொரு […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து , அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை தகவல்கள் பரவியது. ஆனால், மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனாலும், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளாராம். இது தொடர்பாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மணிரத்னத்தின் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் பெற 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் தனது தொழிலை மீட்டெடுக்க ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும்,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21-55 வயது வரையுள்ள தொழில் முனைவோர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த 20.04.2022 அன்று குறு, சிறு மற்றும் […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,135 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,103 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,135 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,11,711-லிருந்து 1,13,864 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,223 பேர் […]
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் […]
பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அவர் தான் காரணம் என்று விமர்சித்து வருகிறார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாங்கள் […]
இங்குள்ள பிரச்சினைகளை பிரதமரும் அவரது அரசும் இதுவரை புரிந்துகொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன்விளைவாக உயிரிழப்புகளோ நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது கொரோனா வைரசின் 2 வது அலை நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பூஞ்சை தொற்று நோய்களோ வித விதமாக மக்களிடையே பரவி அவர்களின் உயிரைக் குடித்துவருகிறது. மேலும் ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் வாட்டி எடுக்கின்றது. […]
கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை. இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் […]
அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர். இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க […]
கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி. டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு […]
தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை […]
இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் […]
வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும்…. சுகாதார நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள் ! இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், மேலும் புதிதாக பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கருப்பு பூஞ்சை ஒரு பக்கம் பரவிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை பூஞ்சை நோய்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை ஒத்தவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஞ்சை […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 36,184 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.467 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 36,184 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,70,988 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 5,913 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று […]
கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம். அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக […]
தமிழகத்தில் இன்று மட்டும் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,867 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,99,225 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,297 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 365 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்துள்ளதாக […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 33,658 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 303 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,65,035 பேராக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,640 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 303 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,359 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. […]
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது வீட்டில் நடந்த விபரீதம்! டெல்லியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது திருட்டு நடந்துள்ளது, வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்குமார் வசித்து வருகிறார், அவர் தன் மனைவியுடன் கொரோன தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளார். இந்தசூழலை பயன்படுத்திக்கொண்டு கொள்ளையர்கள் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டை சூரையாடியுள்ளதாக போலீஸ் தெறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அரவிந்த்குமார் பட்வா (40), செவ்வாய்க்கிழமை, தடுப்பூசி போடுவதற்காக புதன்கிழமை காலை 10 மணியளவில், அவர் […]
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டெல்லியில் சற்று குறைந்த பாதிப்பு. இந்திய தலைநகரமான டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வந்தது, இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு ஊரடங்கை அமல்படுத்தினார், இதன் விளைவாக கடந்த சில நாட்களாக டெல்லியில் தொற்று எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. டெல்லியில் தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் இதைப்பற்றி டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை அன்று […]